மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் – Kumudam

Spread the love

வருகின்ற ஜுலை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இடைத் தேர்தலுக்காக பாஜகவின் வேட்பாளர்கள் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பாரைக் ஆகியோர்  திங்கள்கிழமை தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்று மேற்கு வங்கச் சட்டபேரவையின் உள்ள தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடுத்து சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பாரைக் ஆகியோர் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும் அக்கட்சியிலிருந்தும் விலகியதால் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாகி உள்ளது.

சரியாக ஒரு மாதம் பிறகு இம்முறை பாஜக சார்பில் மூவரும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர். இதனால் ஜுலை 9 ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். இணைந்த சில மணி நேரத்திலேயே மேற்கு வங்கம் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *