மைக்ரோசாப்ட் 365 சேவை முடக்கம்: அவுட்லுக், டீம்ஸ் எப்போது சீராகும்?|Outlook, Teams Still Hit! Microsoft 365 Recovery Underway

Spread the love

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனர்களின் சேவைகளைப் பாதித்த மைக்ரோசாப்ட் 365 தொழில்நுட்பக் கோளாறு தற்போது படிப்படியாகச் சீராகி வருகிறது.

இருந்தாலும், நவம்பர் 12-ம் தேதி இரவு சுமார் 11:30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சேவை முடக்கம், 16 மணி நேரத்திற்கும் மேலாகியும் இன்னும் முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை.

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, “சேவைகளை மீட்டெடுப்பதில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றும்,

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பின் சில பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

டிராஃபிக்கை படிப்படியாகச் சீர்செய்து வருவதோடு, மெயில்பாக்ஸ் மற்றும் தாமதமாகும் மின்னஞ்சல்களைச் சரிசெய்வது ஆகியவை தற்போது நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலுமே, சில பயனர்களுக்கு அவ்வப்போது சிறிய இடையூறுகள் தொடர வாய்ப்புள்ளது. மைக்ரோசாப்ட் தனது மீட்புப் பணிகளை மற்ற பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது.

மேலும், சேவையின் நிலைத்தன்மையை மேம்படுத்தக் கூடுதல் சர்வர் திறனையும் இணைத்து வருகிறது. சேவை எப்போது முழுமையாகச் சீராகும் என்பதற்கான காலக்கெடுவை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *