மைலேஜ் குறையுமா, என்ஜின் பாதிக்குமா.. E20 எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு முழு விளக்கம் | Will mileage drop? Central Government provides full explanation regarding E20 ethanol blending

Spread the love

Business

oi-Velmurugan P

டெல்லி: இந்தியாவின் E20 எத்தனால் கலப்புத் திட்டம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய அரசு, இந்த பிரச்சனை பற்றி விரிவான மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிகப்படியான தண்ணீர் நுகர்வு, என்ஜின் பாதிப்பு, சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் மைலேஜ் குறைவு தொடர்பான புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறுகையில், “பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்து வழங்கப்படும் E20 எரிபொருள் திட்டம் என்பத, அறிவியல் பூர்வமான சான்றுகள், விரிவான சோதனைகள் மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான நடைமுறைகளின் படி தான் நாங்கள் செயல்படுத்துகிறோம்.

Will mileage drop Central Government provides full explanation regarding E20 ethanol blending

வாகனத்தின் மைலேஜ்

வாகனங்களின் மைலேஜ் பற்றி இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் சார்பில் சுமார் 40,000 கி.மீ பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதேபோல் இருசக்கர வாகனங்களில் 20,000 கி.மீ தூரம் வரை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளில், வாகனத்தை ஓட்டும் தன்மையிலோ அல்லது எரிபொருள் திறனிலோ எந்தவொரு சொல்லிக்கொள்ளும்படியான பாதிப்பு கண்டறியப்படவில்லை. மைலேஜில் “மிகக் குறைந்த அளவு” மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. E20 பெட்ரோலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள், எத்தனாலின் அதிக ஆக்டேன் மதிப்பீட்டின் மூலம் பயனடைந்து வருகிறது.

என்ஜின் மற்றும் பாகங்கள் பாதிப்பு

E20 எரிபொருள் என்ஜின்களைப் பாதிக்கும்.. வாகனப் பாகங்களை அரிக்கும் என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலுமை தவறானவை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்திய பெட்ரோலிய நிறுவனம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் நடத்திய ஆய்வுகளில், வாகனத்தை ஓட்டும் தன்மையிலோ அல்லது உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களின் இணக்கத்தன்மையிலோ எந்தப் பிரச்சினையும் கண்டறிப்படவில்லை. எனினும் சில பழைய வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்களுக்கு மட்டும் வழக்கத்தை விட முன்னதாகவே மாற்றவேண்டிய நிலை வரும் என்பதை கண்டறிந்துள்ளது.

E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் வாரண்டி அல்லது இன்சூரன்ஸ் பாதுகாப்பு ரத்தாகிவிடும் என்ற புகார்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். E20 பியூலுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய வாரண்டி மற்றும் இன்சூரன்ஸ் விதிமுறைகளின் கீழ் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டன.

எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர்?

ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்ற புகாரில் துளியும் உண்மை கிடையாது. . நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்த பிறகு, ஒப்புதல் அளிக்கப்பட்ட உபரி அரிசி மட்டுமே எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடப்படுகிறது. மேலும், எத்தனால் வடித்தாலலைகள் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு சுமார் 3-5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகின்றன. அவை தண்ணீரை மறுசுழற்சி செய்யும் ‘ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்’ அமைப்புகளின் கீழ் இயங்குவகுவதையும் அதிகரித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் எத்தனாலில் தற்போது 40 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களிக்கும் சோளம், நெற்பயிரை விடக் கணிசமாகக் குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படுகிறது. எனவே இதனை அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலைகள் மூலம் ஊக்குவிக்கிறோம்.

உலகளாவிய நடைமுறை என்ன

E20 என்பது சோதிக்கப்படாத ஒரு எரிபொருள் கிடையாது.. எத்தனால் கலந்த எரிபொருள்கள் பல ஆண்டுகளாகாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பல்வேறு அளவுகளில் எத்தனால் கலப்பு முறையை வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வருகின்றன.

சர்க்கரை வதந்தி

E20 எரிபொருளில் சர்க்கரை இருப்பதால் எறும்புகளும் தேனீக்களும் ஈர்க்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் முற்றிலும் தவறானவை. எரிபொருள் தரத்திலான எத்தனால் காய்ச்சி வடித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே அதில் எஞ்சிய சர்க்கரைகள் முற்றிலும் நீக்கப்பட்டுவிடும். அத்துடன் பூச்சிகளை விரட்டும் தன்மைகளைக் கொண்ட பொருட்கள் எரிபொருளில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கலப்பு எரிபொருளிலும் பெட்ரோலின் ஹைட்ரோகاربன் வாசனைதான் ஆதிக்கம் இருக்கும். எனவே பூச்சி மொய்க்க வாய்ப்பே இல்லை.

உச்ச நீதிமன்ற வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் E20 திட்டத்தை ஒரு “பரிசோதனை” என்று மத்திய அரசு ஒரு போதும் கூறவில்லை. அந்த நீதிமன்ற வழக்குகளுமே எத்தனால் கொள்முதலை நிர்வகிக்கும் ஒப்பந்த விதிகள் தொடர்பானதுதானே தவிர, எத்தனால் கலப்பின் அறிவியல் நம்பகத்தன்மை குறித்தது கிடையாது. ஊடகங்களில் அவ்வாறு வெளியான செய்திகள் துல்லியமற்றவை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏற்கனவே விளக்கமளித்திருக்கிறது.

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் மற்றும் கரும்புச் சாறு வதந்திகள்

E20 எரிபொருள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் நுழைவதற்கான அபாயத்தை அதிகப்படுத்ததவாக கூறப்படுது வதந்தி ஆகும்.. அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. நவீன வாகனங்கள் மற்றும் எரிபொருள் விற்பனை உள்கட்டமைப்புகளில் தண்ணீர் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதேபோல், பெட்ரோலுடன் கரும்புச் சாறு கலக்கப்படுவதாகக் கூறப்படும் வைரல் வீடியோக்கள் திரித்து வெளியிடப்ட்டவை ஆகும். எரிபொருள் எத்தனால் மிகச்சரியான தொழில்நுட்ப முறை மூலம் தயாரிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி மட்டுமே கலக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகள்

எத்தனால் ஆலைகளுக்குச் சட்டப்பூர்வ சுற்றுச்சூழல் அனுமதிகளை கட்டாயமாக்கி உள்ளோம். அவை நிலத்தடி நீர் விதிமுறைகளுக்கு உட்பட்டவை மற்றும் ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் 2014-15 ஆம் ஆண்டு முதல்:

ரூ. 1.9 லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி மத்திய அரசு சேமித்துள்ளது

விவசாயிகளுக்கு ரூ. 1.6 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை நாங்கள் செலுத்தி உள்ளோம்.

E20 எரிபொருள் காரணமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு சுமார் 930 லட்சம் மெட்ரிக் டன்கள் நாட்டில் குறைந்துள்ளது

310 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியை E20 எரிபொருள் குறைந்திருக்கிறது.

நமது நாடு பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை திட்டமிட்டடிருந்தது உண்மை.ஆனால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே, 2025 டிசம்பரில் எட்டிவிட்டது. 2013-14 இல் இந்த கலப்பு அளவு சுமார் 1.5 சதவீதமாக மட்டுமே இருந்த . நாட்டின் நிறுவப்பட்ட எத்தனால் உற்பத்தித் திறன் சுமார் 2,000 கோடி லிட்டர்களை எட்டியுள்ளதுடன், 2025-26 எத்தனால் விநியோக ஆண்டில் கொள்முதல் 1,200 கோடி லிட்டர்களைத் தாண்டும் என்று கணித்துள்ளோம்” இவ்வாறு மத்திய அரசின் அறிவிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *