மசூத் பெசெஷ்கியன் சந்தித்த…
சமீபத்தில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் மொஜ்தபாவைச் சந்திக்கக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பார்த்த நபர் மொஜ்தபா இல்லை என்று சந்தேகப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்கு முன்பும் சரி… பின்னும் சரி… உண்மையிலேயே மொஜ்தபா உயிரோடு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது… இருக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹர் மொஜ்தபா கமேனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால், அந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்கிற எந்தக் குறிப்பும் இல்லை.