“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

Spread the love

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ் மோஜன் வாரியத் தலைவர் லயோலா மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன், “வருகின்ற குழந்தைகள் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் சார்பில் ‘குட்டி கேக்’ (Mini Cake) வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மோடி - விஜய்
மோடி – விஜய்

விசிக மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணியின் வலுவான தூணாக நிற்கிறது. இந்த கூட்டணியில் எந்தவித சஞ்சலமோ, ஊகங்களோ இல்லை. முதலமைச்சரும் அண்ணன் திருமாவளவனும் இணைந்திருப்பது ஒரு கொள்கை ரீதியான, ஆர்கானிக்கான கூட்டணி. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அரசு விழாவில் பிரதமருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர், நாகரிக அரசியலுக்கும் நட்பு அரசியலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் கட்சித் தலைவராகவும், பிரதமர் மோடியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அவர் திறம்படச் செயல்பட்டுள்ளார். அந்த மேடையில் தெளிவான ஆங்கிலத்தில் தமிழர்களின் உரிமைக் குரலாக நின்று, நதிநீர் இணைப்பு, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ், மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதன் மூலம் நாகரிக அரசியலின் அளவுகோலை முதலமைச்சர் உயர்த்தியுள்ளார்.

அமைச்சர் ராஜ் மோகன்
அமைச்சர் ராஜ் மோகன்

முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே இப்போதைய அரசு திறந்து வைப்பதாக விமர்சிக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக நிறைவேற்றப்படுகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த குற்றங்கள், சட்ட ஒழுங்குப் பிரச்னைகள், இளைஞர்கள் போதையில் சிக்கியது போன்ற அனைத்திற்கும் அன்றைய ஆட்சியாளர்களே பொறுப்பு.

ஆனால், தற்போதைய ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நிதி விரயம் தடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை ஊழல் இல்லாத சூழல் நிலவுவதால் பணிகள் மிக வேகமாக நடந்து முடிவடைந்து வருகின்றன. இது ஒரு தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் மேலும் பல நல்ல திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *