அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), கணையப் புற்றுநோய் (Pancreas Cancer), கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) போன்றவை…
உடலில் அசாதாரண மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உணவு முறையையோ அல்லது உடற்பயிற்சியையோ மாற்றாத நிலையிலும், எதிர்பாராத விதமாக உடல் எடை திடீரென குறைவது…
சருமத்தின் கீழ் புதிதாகத் தோன்றும், வலியற்ற அல்லது நாளுக்கு நாள் அளவில் பெரிதாகி வரும் கட்டிகள் மற்றும் தடிப்புகள்…
நீண்ட நாள்களாக இருக்கும் விவரிக்க முடியாத வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலம் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து போதல்… நீண்ட நாள்களாகக் குணமாகாத இருமல் அல்லது குரலில் ஏற்படும் தொடர்ச்சியான கரகரப்பு… உடலில் புதிய மச்சங்கள் தோன்றுவது அல்லது ஏற்கெனவே உள்ள மச்சங்களின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுவது… பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாள்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, அசாதாரண ரத்தப்போக்கு… போன்ற அறிகுறிகள் இருந்தால் அலர்ட் ஆகி, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெல்ல, தகுந்த இடைவெளியில் (வருடத்திற்கு ஒருமுறை) மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், உடலின் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடி கவனம் கொடுப்பதும் மிக அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.