Tamilnadu
oi-Halley Karthik
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணை கைதி சபரிவர்மன் என்பவர், மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த திமுக எம்பி கனிமொழி, யாரை காப்பாற்ற சக கைதிகள் மீது வழக்கு? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சுசீந்தரம் அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர், தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

ஆனால், கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கூறி, கடந்த ஜூலை.9ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, ஜூலை 12ம் தேதி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்க, சபரிவர்மன் மரணமடைந்த செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சபரிவர்மனுக்கு எந்த கொடிய நோய்க்கான பாதிப்புகளும் இல்லை. இப்படி இருக்கையில் திடீரென மரணம் எப்படி ஏற்பட்டது? என்று கேள்வி எழுப்பி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை
இந்த உயிரிழப்பு தொடர்பாக பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிவர்மனின் உடலில் மொத்தம் 19 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வலது கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மரணத்திற்கு இந்த காயங்கள் காரணமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனிமொழி வலியுறுத்தல்
இப்படி இருக்கையில் இன்று சபரிவர்மனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் திமுக எம்பி கனிமொழி. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காவல் மரணங்களுக்கு முந்தைய அரசு போறுப்பேற்றது. ஆனால், இந்த அரசு மற்றவர்கள் மது பழிபோடுகிறது. நாகர்கோவில் காவல் மரணம் விவகாரம் மூடு மந்திரமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்ன? உண்மையில் நடந்தது என்ன? என்கிற கேள்வி எழுகிறது.
நாகர்கோவில் லாக் அப் மரணம்.. மாற்றம்னு சொல்லிதான வந்தீங்க விஜய்.. கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்!
சிபிஐ விசாரணை
மரண வழக்கிலிருந்து சிலரை காப்பாற்றவே.. உடன் இருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். பிரேத பரிசோதனையில் உயிரிழப்புக்கு காரணம் என்ன? நேரம் என்ன? என்று குறிப்பிடப்படவில்லை. 19 காயங்கள் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மனுக்கு என்ன நடந்தது.. பா ரஞ்சித் எழுப்பிய கேள்விகள்
அப்படியெனில் மரணைத்திற்கு காரணம் என்ன? இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை. வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து அவர் மரணமடைந்திருக்கிறார். இந்த மரணம் தொடர்பாக சிறையில் இருந்த நீண்ட நாள் கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
