யார் இந்த கெவின் குண்டா? ராம் சரணின் பாடி கார்டு சம்பளம் – முழு விபரம்! Who is Kevin Kunda? Ram Charan’s Bodyguard’s Salary — Full Details!

Spread the love

ராம் சரணுடன் எத்தனை வருடப் பழக்கம்?

பலரும் இவர் சமீபத்தில் தான் ராம் சரணின் பாதுகாவலராகப் பணிக்குச் சேர்ந்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராம் சரண், “கெவின் கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துக்காகப் பணிபுரிந்து வருகிறார். நாங்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போதெல்லாம் அவர் தான் பாதுகாப்புக்காக வருவார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையேயான நீண்டகால நம்பிக்கையும், நட்பும் இருக்கிறது.

ராம் சரண் Bodyguard கெவின் குண்டா

ராம் சரண் Bodyguard கெவின் குண்டா

தனது பாதுகாவலர் திடீரென இணையத்தில் வைரலானது குறித்துப் பேசிய ராம் சரண், நகைச்சுவையாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “நீங்கள் அனைவரும் அவரை மிகவும் பிரபலமாக்கிவிட்டீர்கள். அதனால் நான் இப்போது அவரைத் தனியாக வெளியே அனுப்புவதே இல்லை. யாராவது அவருக்கு ஒரு சாக்லேட்டோ, பிஸ்கட்டோ லஞ்சமாகக் கொடுத்து என்னைப் பற்றிய ரகசியங்களைக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்திய ரசிகர்களின் இந்த எதிர்பாராத அன்பைக் கண்ட கெவின் குண்டாவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். ஒரு ஹாலிவுட் ரேஞ்ச் பாதுகாவலரை ராம் சரண் நியமித்திருப்பது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *