தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா?