ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், நெல்சல் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? | How is film Jailer 2, starring Rajinikanth and S.J. Suryah and directed by Nelson?

Spread the love

காமெடி ஏரியாவில் அதகளம் செய்யும் வாய்ப்பு நமோ நாராயணாவுக்கு! அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முதல் பாதி முழுக்க திரையரங்கைச் சிதறடிக்கிறார். யோகி பாபு அதற்குத் துணை நிற்க, முதல் பாகத்தில் வந்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் மாஸ்டர் ரித்விக் அதே வேடங்களில் தலைகாட்டுகின்றனர். கேமியோ ஸ்டார்களாக சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் முதல் பாகத்தின் நீட்சியாகவே வந்து போகின்றனர். 

பல நிலப்பரப்புகளில் நடக்கும் கதையைப் புழுதி பறக்க படமெடுத்து இருக்கிறது விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா. கார் வைப்பர் ஷாட், கார் வெடிப்பது, ஸ்லோமோ ஷாட் என விருந்து வைத்திருக்கிறது அவரின் ஒளிப்பதிவு. நிதானமாகத் தொடங்கி, இடைவேளைக்கு முன்னர் வேகமெடுத்து, பின்னர் அதை அப்படியே தக்க வைத்திருக்கிறது ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு.

Jailer 2 Review | ஜெயிலர் 2 விமர்சனம்

Jailer 2 Review | ஜெயிலர் 2 விமர்சனம்

பில்டிங் வெடிப்பது, விமானம் வெடிப்பது போன்றவற்றை இன்னும் நேர்த்தியான கிராபிக்ஸில் காட்டியிருக்கலாம். அனிருத் இசையில் பாடல்களே பின்னணி இசையாக ஒலிப்பது மாஸ் கூட்டியிருக்கிறது. ஆனால், ‘அல்லா போலேலே’ பாடலும், இரண்டாம் பாதி ‘பிந்தாஸ்’ பாடலும் வேகத்தடைகளே!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *