டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்வம் மூலம் ஆழமான அரசியல் அறிவைப் பெற்றிருக்கிறார். அந்தப் பேட்டியில், நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், குறிப்பாக உழைக்கும் வர்கத்தினர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அவர் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. அவர் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் தேடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெயர் இர்பான் என்றும், சாலையில் ஐஸ் விற்கும் தொழில் செய்பவர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இர்பானை அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
ராகுல் காந்தியுடனான உரையாடலின்போது, “எனக்கு எந்தத் தனிப்பட்ட கோரிக்கைகளும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி தீர்வை நோக்கி நகர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.