ரஜினி, விஜய் குறித்த பேச்சு; சோஷியல் மீடியாவில் எழுந்த சர்ச்சை; விளக்கம் அளித்த விஷ்ணு விஷால்| vishnu vishal on controversy about taking vijay and rajinikanth

Spread the love

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது சர்ச்சை கிளப்பி இருந்தது.

'கட்டா குஸ்தி-2'

‘கட்டா குஸ்தி-2’

அதவாது பேட்டியில் பேசியிருந்த அவர், ” சோஷியல் மீடியாவின் பயன்பாடு இன்று மிக மிக அதிகமாக இருக்கிறது. அவை சில சமயங்களில் ஆபத்தானதாகவும் மாறுகிறது.

தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக்கொண்டு, ‘எனக்கும் விஜய்க்கும் ஒன்றும் இல்லை’ என விளக்கம் சொல்லும் நிலைமைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட விசித்திரமான சூழலில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தலைவரே கூட நான்கு நாட்கள் எந்தப் பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால்கூட அவரை பற்றி ஏதோ ஒரு தவறான விஷயத்தை கிளப்பி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கிவிடுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *