“ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!”- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

Spread the love

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி-க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருக்கின்றனர்.

ராகவ் சதா

ராகவ் சதா

இதில் எம்பி ராகவ் சதா ஆம் ஆத்மியில் இருந்து விலகி , பாஜகவில் இணைந்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துவந்தவர் ராகவ் சதா.

ராகவ் சதா, நாடாளுமன்றத்தில் சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்னைகளை ஆணித்தரமாகப் பேசுவதன் மூலம் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வந்தார்.

இதனிடையே ராகவ் சதாவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் அவரை மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *