ரவி மோகன் வீட்டில் திருட்டு: ‘3 லட்சம் அல்ல’ – காவல் துறை வழக்குப்பதிவில் வெளியான உண்மை விவரம்!| what happened in the controversial complaint filed by actor ravi mohan

Spread the love

ஊழியர்கள் சிக்கியது எப்படி?

பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நடிகர் ரவி மோகன், வீட்டில் பணிபுரியும் அலமேலு மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரிடம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் போது, வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் சேர்ந்தே இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அலமேலு ஒப்புக்கொண்டுள்ளார்.

ரவி மோகன்

ரவி மோகன்

இதனடிப்படையில், திருட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜேஷ் (ஓட்டுநர்), சதீஷ் (தனிப்பட்ட உதவியாளர், அலமேலு (வீட்டு வேலைக்காரர்), ராஜேஷ் (தனிப்பட்ட ஓட்டுநர்), வசந்த் (அலமேலுவின் மகன்) உள்ளிட்ட ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் 3 லட்சம் பணம் திருட்டுபோனதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் 40,000 ரொக்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும் காணாமல் போயிருப்பதாகவே ரவி மோகனின் மேலாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *