International
oi-Nantha Kumar R
மாஸ்கோ: சைபீரியாவில் நேற்று இரவு பயணித்து கொண்டிருந்த ரஷ்ய ராணுவத்தின் சரக்கு விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 19 பேரும் பரிதாபமாக இறந்த நிலையில் அதன் பின்னணி குறித்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் ராணுவத்துக்கு சொந்தமான Antonov An -12 ரக சரக்கு விமானம் உள்ளது. இந்த விமானம் நேற்று இரவு ரஷ்யாவில் இருந்து திட்டமிட்டப்படி சைபீரியாவுக்கு பறந்து கொண்டிருந்தது.

அப்போது யாகுநோவோ கிராமத்தில் திடீரென்று விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த விமான பணியாளர்கள் உள்பட 19 பேரும் இறந்துள்ளனர்.
இவர்களின் உடல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அடையாளம் காணும் பணியில் சிரமம் நிலவி வருகிறது.
இதனால் டிஎன்ஏ பரிசோதனை வழியாக உடல்கள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளது. இந்த விபத்தை ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதுபற்றி கெமரோவோ பிராந்திய ஆளுநர் இல்யா செரிடக் கூறுகையில், ”ராணுவ விமானம் யாகுனோவா கிராமத்தில் விபததில் சிக்கியது. இந்த இடம் பிராந்திய தலைநகரில் இரந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது”என கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் இந்த விமான விபத்துக்கு எரிபொருள் கசிவால் ஏற்பட்ட தீ தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதாவது விமானம் பறந்து கெண்டிரந்தபோது விானத்தின் 4 இன்ஜின்களில் ஒரு இன்ஜினில் எரிபொருள் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் விமானத்தின் செயல்பாட்டை தடுத்து விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இதுபற்றி ரஷ்யாவின் செய்தி நிறுவனம் Baza கூறுகையில், ”விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனா் இன்ஜின் தீப்பிடித்து ஹைட்ராலிக் பெயிலியர் ஆகியுள்ளது. இதுதான் ரஷ்யாவின் Antonov An -12 ரக விமானம் கெமரோவா பகுதியில் விபத்தில் சிக்க காரணமாக இருக்கலாம்” என கூறியுள்ளது.