நானே பார்த்தேன்…
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தபோது, அமித் ஷா காவல் அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து பேசுவதை நானே பார்த்தேன்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு அமித் ஷாவிடமிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்ததையும் பார்த்தேன்.
எனவே, வீதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
இப்போது இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. முதலாவது, ‘மக்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள், ஆணிகள் அடித்த தடிகளால் அடியுங்கள், எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் லத்திகளைப் பயன்படுத்துங்கள்’ என்று அவரே உத்தரவிட்டிருக்க வேண்டும். அல்லது, இது நடப்பதே அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.

இது நடப்பதே தெரியவில்லை என்றால் அவர் தகுதியற்றவர். ஒருவேளை அவர்தான் உத்தரவிட்டார் என்றால் அவர் குற்றவாளி. இதைத் தவிர மூன்றாவது சாத்தியக்கூறே இல்லை.
டெல்லி காவல்துறையும் சரி, விரைவு அதிரடிப் படையும் சரி இரண்டுமே அமித் ஷாவின் கீழ்தான் வருகின்றன.
எனவே, பிரதமருக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்… ‘அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்குங்கள்’. உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் கண்காணிப்பில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று பேசியுள்ளார்.