கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12), வாக்காளர் பட்டியலில் முறைகேடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற மனுவோடு டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.
இந்தப் பேரணியில் ராகுல் காந்தி கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை காலரைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிடுவதுபோல வீடியோவை சமூக வலைதளங்களில் பாஜகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து, “பரம்பரையாக… வழிவழியாக வரும் அதிகாரத் திமிருக்கு ஒரு முகம் இருந்தால், அது நிச்சயமாக இப்படித்தான் இருக்கும்” என்றும் ராகுல் காந்தியின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் பாஜகவினர்.
பாஜகவினர் ஷேர் செய்யும் வீடியோ:
இந்த வீடியோ குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் டி.கே.சிவக்குமார்.
அந்தப் பதிவில், “நமது போராட்டம் ஜனநாயகத்திற்காகத்தான். திசைதிருப்பல்களுக்காக அல்ல.
நேற்றைய போராட்டம், வாக்குத் திருட்டிற்கு எதிராகவும் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றுதிரண்ட மக்களின் பெருங்கடலையே கண்டது.
ராகுல் காந்தி எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் வாகனத்திற்குத் திரும்புமாறு எனக்கு அறிவுறுத்தினார்.