ராகுல் சஹர் லிஸ்டில் இல்லையா.. 11 வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே.. அணியில் இருப்பது யார்? | CSK released 11 players including Prashant Veer, Matt Henry and MS Dhoni; Rahul chahar retained

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணி மொத்தமாக 11 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. தோனி, பிரசாந்த் வீர், ஷார்ட், ஹென்றி, ஃபோல்க்ஸ், ஆகாஷ் மத்வால் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் சஹர் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதுதொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தோனி ஓய்வை அறிவித்துவிட்ட சூழலில், அவருக்கு ஆலோசகர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலில் உள்ள பெயர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி மொத்தமாக 11 வீரர்களை சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்துள்ளது.

CSK

சிஎஸ்கே அணியில் இருந்து தோனி, பிரசாந்த் வீர், மேட் ஹென்றி, ஃபோல்க்ஸ், ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ ஷார்ட், அமான் கான், ஆகாஷ் மத்வால், குல்திப் யாதவ், ஃபாரஸ்டர், நோரன்ஹா ஆகியோர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி 5 வெளிநாட்டு வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். 6 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான வீரர்கள் மாற்று வீரர்களாக வந்தவர்கள் தான்.

இதனால் சிஎஸ்கே அணி மொத்தமாக 19 வீரர்களை தக்க வைத்துள்ளது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 வீரர்களை மட்டுமே வாங்க வேண்டிய தேவை உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் சஹர் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உர்வில் படேல், சர்ஃபராஸ் கான், பிரெவிஸ், கார்த்திக் சர்மா, ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோ ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், அன்சுல் கம்போஜ், நூர் அஹ்மத், குர்ப்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, அகீல் ஹொசைன், சிவம் துபே, ராகுல் சஹர், லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் உள்ளிட்டோர் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உர்வில் படேல், சர்ஃபராஸ் கான், பிரெவிஸ், கார்த்திக் சர்மா, ஆயுஷ் மாத்ரே, அன்சுல் கம்போஜ், நூர் அஹ்மத், குர்ப்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால், ஸ்பென்சர் ஜான்சன், ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, அகீல் ஹொசைன், சிவம் துபே, ராகுல் சஹர், லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *