ராக்கா படம் கின்னஸ் சாதனை! அட்லீ – அல்லு அர்ஜுன் படைத்த மாபெரும் சாதனை| Allu Arjun & Atlee’s Raaka Sets Guinness World Record for Real-Time Motion Capture

Spread the love

நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

அதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.

இந்தத் தகவலைப் பகிர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், “வரலாறு படைக்கப்பட்டது. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சர்வதேச வெற்றி.

ஒரே நேரத்தில் 37 கலைஞர்கள் படம்பிடிக்கப்பட்டதன் மூலம், “ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் (Motion-Captured in Real-Time) செய்யப்பட்ட திரைப்படம்” என்ற கின்னஸ் உலக சாதனையை ராக்கா படைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடையாளம் காணும் வகையில், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயும் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *