19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெளியேற, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். முன்னதாக ஷோ தொடங்கிய ஒரு வாரம் கழித்து ஆனந்தியும் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது நினைவிருக்கலாம்.
ஆனந்தி சென்றது முதலே அவருக்கும் நடிகை லக்ஷ்மி பிரியாவுக்கும் இடையில் மோதல்தான்.
இந்நிலையில் ஆனந்தியின் அம்மா ரேணுகாவிடம் பேசினோம்.

“‘அடிப்படையில் நான் ஒரு டீச்சர். கேந்திரிய வித்யாலயாவுல வேலை பார்த்து ரிட்டயர்டு ஆகிட்டேன். என் வீட்டுக்காரர் உடற்பயிற்சி ஆசிரியர். அதனால நாங்க ரெண்டு பேருமே பிக்பாஸ் பார்க்கறதில்லங்கிறது மட்டுமில்ல, எங்க சர்க்கிள்ல உள்ளவங்க கூட யாரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்ல.
சொல்லப் போனா, நான் ஸ்கூல்ல ஒர்க் பண்ணிட்டிருந்தபோது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கக் கூடாது’னு பசங்களைத் திட்டிட்டிருப்பேன்.
ஏன்னா அது ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சி இல்லையல்லவா?