ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு; ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ்

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்தில் பா.ஜ.க முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் படிப்படியாக காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இதில் மொத்தமுள்ள 37 ஜில்லா பரிஷத்தில் 23 ஜில்லா பரிஷத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று இருக்கிறது.

இதேபோன்று 419 பஞ்சாயத்து சமிதிகளுக்கு நடந்த தேர்தலில் 229ல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் பா.ஜ.க 5 ஜில்லா பரிஷத்களிலும், 51 பஞ்சாயத்து சமிதிகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 1271 ஜில்லா பரிஷத் இடங்களில் காங்கிரஸ் 794 இடங்களை பிடித்து இருக்கிறது. அதாவது 62 சதவீத இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

ஆளும் பா.ஜ.க 357 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. ஒட்டுமொத்த ஓட்டு சதவீதத்தில் காங்கிரஸ் 43.4 சதவீதமும், பா.ஜ.க 37.8 சதவீதமும் பெற்று இருக்கிறது. கிராமங்களில் காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

இத்தேர்தலில் ராஷ்ட்ரீய லோக்தாந்திரிய கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதேபோன்று பாரத் ஆதிவாசி கட்சியும் 11 பஞ்சாயத்து சமிதிகளில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

இத்தேர்தல் முடிவுகள் முதல்வர் பஜன்லால் சர்மாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. 41 மாவட்டங்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. இத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் பல அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களின் உறவினர்கள் தோல்வியை தழுவி இருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *