
தற்போது நிதித்துறையை கவனித்து வரும் அமைச்சர் மரிய வில்சனுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், நிதித்துறையை நிர்வகிப்பதில் சிரமம் இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நிதித்துறையை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், அமைச்சர் மரிய வில்சனுக்கு தொழில்துறை இலாகாவை வழங்கலாமா என்ற கோணத்திலும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ராஜ்மோகனுக்கு இன்னொரு முக்கிய இலாகா?
நிதித்துறையுடன் சேர்த்து, தற்போது முதலமைச்சர் விஜய் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையையும் அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அப்படி இலாகா மாற்றம் நடந்தால், ராஜ்மோகனிடம் நிதி + நகராட்சி நிர்வாகம் என இரண்டு முக்கியமான துறைகள் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருபக்கம் நிதித்துறை மாற்றம்… மறுபக்கம் தொழில்துறை மாற்றம்… அதோடு முதலமைச்சரின் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையிலும் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இலாகா மாற்றம் தொடர்பான இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், யாருடைய இலாகா பறிக்கப்படுகிறது… யாருடைய கையில் அதிகாரம் கூடுகிறது? என்பதே அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.