ராஜ்மோகனுக்கு வந்த Phone Call.. சிக்னல் கிடைத்த உடன் கண்ணீர்விட்ட சத்யபாமா? ஸ்கிரிப்டா? சென்டிமென்ட்டா? – Kumudam

Spread the love

மேடையில் பேசிய சத்யபாமா, “தலைவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நான் இங்கே பார்ப்பது கனவா, நனவா என்று தெரியவில்லை. காசு கொடுத்து கூட்டம் கூட்டி, கூட்டம் முடிந்ததும் கலைந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே மக்கள் அப்படியே காத்திருக்கிறார்கள். புரட்சித் தலைவரை பார்க்க வந்த கூட்டம் போல இருக்கிறது. புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது” என்று விஜய்யை புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சத்யபாமா, அவரது தலைமையை பிடிக்காமல்தான் தான் வெளியேறியதாகக் கூறினார். தன்னை சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசுவதாகவும், “நான் என்ன தவறு செய்தேன்?” எனக் கேட்டு, தான் கண்ணீர்விட்டு அழுதார்.

அப்போது அருகில் இருந்த முதலமைச்சர் விஜய், சத்யபாமாவின் தோளைத் தட்டி ஆறுதல் கூறினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆனால்… அந்தக் கண்ணீருக்கு சில நொடிகளுக்கு முன்பு மேடையில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

மேடையில் இருந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அந்த அழைப்பை முடித்ததும் சத்யபாமாவின் காதில் ஏதோ கூறினார். அதன்பிறகுதான் சத்யபாமாவின் பேச்சு திடீரென உணர்ச்சிப்பூர்வமாக மாறி, அவர் கண்ணீர் விட்டு அழுததாக சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதாவது, கண்ணீர் உண்மையான உணர்ச்சிப் பெருக்கா? இல்லை… அதற்கு முன்பே ஏதாவது சொல்லிக் கொடுக்கப்பட்டதா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

போன் கால் வந்தது… காதில் ஏதோ சொன்னார்கள்… உடனே எமோஷன் எகிறியது… இது தற்செயலா? அல்லது “எமோஷனல் ஆக வேண்டிய இடம் இதுதான்” என்று யாராவது நினைவூட்டினார்களா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் பறக்கின்றன.

அதிலும், சத்யபாமா அழுததும் முதலமைச்சர் விஜய் தோளில் தட்டி ஆறுதல் கூறிய காட்சி வேறு லெவல் வைரல். அரசியல் மேடைதானே… பேச்சு இருக்கலாம், விமர்சனம் இருக்கலாம், பதிலடி இருக்கலாம். ஆனால் இப்போது அதற்கு நடுவே எமோஷனல் சீனும் சேர்ந்துவிட்டதா? என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வி.

எது உண்மையான உணர்ச்சி? எது அரசியல் மேடை சென்டிமென்ட்? என்பது சத்யபாமாவுக்கும், அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கும்தான் தெரியும். ஆனால், அந்த ஒரு போன் கால் மற்றும் அதன்பிறகு நடந்த கண்ணீர் சம்பவம் மட்டும்… “என்ன மேடம்… இது அரசியல் கூட்டமா, கிளைமாக்ஸ் சீனா?” என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *