ராணிப்பேட்டை: சாலையோரம் வெட்டி வீசப்பட்ட இளைஞர்; கூட்டாளிகளுடன் சிக்கிய நண்பன்; நடந்தது என்ன?

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ஜீவா என்கிற தமிழ்வாணன். இவர் கடந்த 21-ம் தேதி இரவு, வன்னிவேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கோரப்புற்கள் வளர்ந்த புதரில் இறந்து கிடந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து, வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

கொலைச் செய்யப்பட்ட ஜீவா என்கிற தமிழ்வாணன்
கொலைச் செய்யப்பட்ட ஜீவா என்கிற தமிழ்வாணன்

இந்த நிலையில், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும், அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருந்ததாலும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர்.

வாலாஜாபேட்டை சத்யா நகரைச் சேர்ந்த ரஃபீக் (35), டி.என்.சி தெருவைச் சேர்ந்த அமீன்பாஷா (42), சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜித் (25) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு ஜீவா கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

கைதான கொலையாளிகள்
கைதான கொலையாளிகள்

இதில், ரஃபீக்கும் ஜீவாவும் நண்பர்களாகப் பழகி வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் ஜீவாவிடம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஜீவாவுடன் ரஃபீக்குக்குத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த முன் விரோதத்தைப் பழிதீர்த்துக் கொள்வதற்காகத்தான் சம்பவத்தன்று வன்னிவேடு பகுதிக்கு ஜீவாவை போன் செய்து வரவழைத்து தீர்த்து கட்டியிருக்கின்றனர்.

பின்னர், சடலத்தைத் தூக்கி புதரில் வீசிவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றக் காவலில் இன்று வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *