ராணிப்பேட்டை பெண் கொலை! பெற்ற மகளே கொன்று நாடகம்! விசாரணையில் பகீர்! பிள்ளை மனம் கல்தான் போல! | Ranipet woman murder case: Her daughter arrested for robbering jewels and murder

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பெற்ற மகளை போலீஸார் கைது செய்தனர். அவரே தனது தாயை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொன்றதாக நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது.

தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் கீதா (54). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் கீதா தனது மூத்த மகள் சரண்யாவுடன் வசித்து வந்தார். சரண்யா, தனியார் பள்ளி ஆசிரியை ஆவார்!

Ranipet

இந்த நிலையில் நேற்று முன் தினம், கீதா சொந்த வேலை காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் அவர் மர்ம நபரால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகையும் பீரோவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான போலீஸார் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கொலை சம்பந்தமாக மூன்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கொலை நடந்த வீடு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தனிமையில் இருப்பதால் வீட்டில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் சுங்கச்சாவடி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

வீட்டில் இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் போலீஸாரின் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. நகை தொடர்பாக தாய் கீதா மற்றும் மகள் சரண்யாவுக்கு இடைய ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கூட நகைத் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது தகராறு முற்றியதை அடுத்து தனது தாயை தானே கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் கொலை செய்தது போல் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து சரண்யாவை கைது செய்த போலீஸார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சரண்யாவுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் சரண்ராஜ் என்பவரையும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10 சவரன் நகைக்காக மகளே, பெற்ற தாயை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என சொல்வார்கள், அது தற்போது 100- க்கு 100 உண்மையாகிவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *