ராமாயணா இசை சர்ச்சை: “விமர்சனங்களைக் கண்டு நாம் கலங்கக்கூடாது”- விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்| ‘Ramayana’ music controversy: “We should not be shaken by criticisms” – A.R. Rahman’s response

Spread the love

நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் “ராமாயணா: ரைஸ் ஆஃப் தி லெஜண்ட்’ (Ramayana: Rise of a Legend) திரைப்படத்திற்கு ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான ‘மங்கள் ரங்’ கடந்த வாரம் வெளியானது. அதைத் தொடர்ந்து, ராமாயணம் தொடர்பான ஒரு படத்திற்கு ‘கவ்வாலி’ பாணியிலான இசை அமைப்பு ஏன் கொடுக்கப்பட்டது?

பாடலின் இசை “சனாதன தர்மத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும், படத்தின் ராவண தாண்டவ இசை மிகவும் ‘எலக்ட்ரானிக்’ (electronic) முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ரங் என்ற வார்த்தை ‘ஆஜ் ரங் ஹை’ என்ற சுஃபி பாடலை நினைவூட்டுகிறது என ஏ.ஆர்.ரஹ்மான் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுக்கால வாழ்க்கையில், இந்தியத் திரை இசையின் வழக்கமான எல்லைகளை உடைத்தெறிந்த ரஹ்மானுக்கு விமர்சனங்கள் புதியவை அல்ல. அவரது பல மெட்டுகள் மக்களின் மனதைச் சென்றடையச் சில ஆண்டுகள்கூட ஆகியிருக்கின்றன. ஆனால், இந்த முறை கிளம்பியுள்ள எதிர்ப்பு என்பது இந்தியாவில் மாறிவரும் தற்போதைய கலாச்சார மற்றும் சமூகச் சூழலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *