ஜடாயு மிகவும் தைரியமானவராக இருந்தாலும், வயது முதிர்வால் தளர்ந்து போகும் அந்த ஒட்டுமொத்தக் காட்சிக்கும் எனது ஆன்மாவையும் இதயத்தையும் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. மேலும், ஒரு முக்கியமான காட்சியில் ஜடாயுவுக்கும் ராமருக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாக வெளிப்பட வேண்டும் என்று இயக்குநர் நிதேஷ் திவாரி அறிவுறுத்தினார். குறிப்பாக இறுதியில் வரும் ‘ஹே ராம்’ என்ற வசனத்தைச் சரியாகப் பேசுவதற்காகக் குறைந்தது 200 முறை முயற்சி செய்திருப்பேன். அது ஒரு சிறிய வரிதான், நாம் பலமுறை கேட்டதும் பேசியதும்தான். ஆனால், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு குரலும் ஒலியும் மிகத் துல்லியமாக அமைய வேண்டியிருந்தது.
எனது இந்தக் கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ‘ராமாயணா’ படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்டபோது, படம் பார்த்த பார்வையாளர்கள் கண்களில் கண்ணீருடன் என்னிடம் வந்து படத்திற்காகவும், ஜடாயு கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வந்த விதத்திற்காகவும் நன்றி தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு திரைப்படம் உருவாகி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைவதைப் பார்க்கும்போது பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.