மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் “பெத்தி’ திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவ ராஜ்குமார், “இயக்குநர் புச்சி பாபு முதலில் என்னிடம் வந்து இந்தச் கதையைக் கூறி, இதில் ‘குருநாயிடு’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரம் இருக்கிறது என்று சொன்னபோதே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இந்தத் திரைப்படத்தை நான் ஒப்புக்கொண்டதற்கு இரண்டாவது முக்கியக் காரணம் ராம் சரண் சார். எனக்கு ராம் சரண் சாரையும், அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ரொம்ப பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட அன்பும் பாசமும் உண்டு.
அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்த நேரத்தில்தான் இந்த வாய்ப்பு வந்தது. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.