ரிஷபம், கன்னி, தனுசு: சனி பார்வையில் 3 ராசிகள்|3 Rasigal Under Saturn’s Gaze

Spread the love

`குரு பார்க்க கோடி நன்மை’ என்பார்கள். சரி, சனி பார்வை… நல்லதா, கெட்டதா? சனி பகவானின் பார்வை சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

சனீஸ்வரர்

சனீஸ்வரர்

குறிப்பாக, தற்போது சனிபகவான் மீன ராசியில் சஞ்சரித்து வருவதால், தனது சிறப்புப் பார்வைகளான 3, 7, 10-ஆம் பார்வைகள் மூலம் ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிகளையும் பார்வையிடுகிறார். மேலும், 2026 டிசம்பர் 11-ஆம் தேதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். இதனால் இந்த மூன்று ராசிக்காரர்களும் தங்களுடைய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலமாக இது அமையும். இந்த மூன்று ராசிகளுக்கான சனி பார்வைப் பலன்களையும் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

1. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சனிபகவானின் பார்வை காரணமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள்களாகத் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் மெல்ல மெல்ல நிறைவேறத் தொடங்கும். குறிப்பாக, தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். அலுவலகத்தில் உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகலாம்.

வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெற முடியும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும்.

பரிகாரம்: ரிஷப ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஏழை – எளியவர்களுக்கு கருப்பு உளுந்து, எள், உணவு போன்றவற்றை தானமாக வழங்கலாம். காகங்களுக்கு உணவு வைப்பதும், ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்!

2. கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் ஏழாம் பார்வை பல்வேறு வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். குறிப்பாக, திருமணம் மற்றும் கூட்டுத் தொழில் தொடர் பான விஷயங்களில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படலாம். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்புகள் உண்டாகும். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கலாம். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்பட்டால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

பணவரவு சீராக இருக்கும். இருப்பினும், குடும்பத் தேவைகளுக்காகச் சில செலவுகள் ஏற்படலாம். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது முழுமையாக ஆராய்ந்து செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் உணவு மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனக்குழப்பங்களைக் குறைத்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவாலயம் சென்று, ஈஸ்வரருக்கு வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் நன்மைகள் உண்டாகும்.

3. தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பத்தாம் பார்வை தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் தொடர்பான விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உத்தியோகம், தொழில், பதவி மற்றும் சமூக அந்தஸ்து தொடர்பான விஷயங்களில் சில மாற்றங் களைச் சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்களில் முன்னேற்றம் கிடைக்கத் தொடங்கும்.

தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க

லாம். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய பொறுப்புகளும் மதிப்பும் அதிகரிக்கலாம். வேலை மாற்றத்திற்காக முயற்சி செய்பவர் கள், தொடர்ந்து முயற்சி செய்தால் நல்ல வாய்ப்புகள் அமையலாம்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகலாம். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கோபத்தைக் குறைத்து, எந்தவொரு முடிவையும் அவசரப்படாமல் எடுப்பது அவசியம்.

பரிகாரம்: பிள்ளையார் கோயில்களுக்கு அபிஷேகத்துக்குப் பால் வாங்கி வழங்கலாம். அங்கே 5 தீபங்கள் ஏற்றிவைத்து பிள்ளையாரை வணங்குங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு. காகங்களுக்கு உணவு வைக்கலாம். இதனால் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *