கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான “டோரதி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக்சஸ் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்துக்கு முன்னாடி வேறொரு படம் இயக்கியிருந்தார். அது ஒரு மொக்க படம்தான். நான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.
சொல்லப்போனா கார்த்திக் சுப்புராஜின் படங்களில், நான் பார்த்த முதல் படம் அதுதான். அவருடைய கடைசி படம், என்னமோ ரொம்ப நேரம் டான்ஸ் ஆடுறதுன்னு பெரிய மொக்கையா இருந்துச்சு. அப்புறம் என் அசிஸ்டென்ட்ஸ் ரெண்டு பேரு ‘கார்த்திக் நல்லா படம் பண்ணுவார் சார்’னு சொன்னாங்க.
‘இருடா நான் பார்க்குறேன், எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்கு, தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நான் திரையரங்குக்கு வர்றது என்னையே எண்டர்டெயின் பண்ணிக்க இல்ல, சாமிகளைக் கும்பிடுறதுக்காகத்தான் வர்றேன்’னு சொன்னேன். ஆனா, இந்தப் படத்தைப் பார்த்து நான் உண்மையிலேயே சாமிகளைக் கும்பிட்டேன்.