ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? | Elon Musk: World’s First Trillionaire Living in a Tiny 1,580 Sq Ft Rented House Near SpaceX

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

எலக்ட்ரிக் கார், விண்வெளி ஆராய்ச்சி, சமூக வலைத்தளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சிகளைப் படைத்து வரும் எலான் மஸ்க், உலக வர்த்தக வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத ஒரு உயரத்தை எட்டியுள்ளார். எலான் மஸ்க்கிற்கு சொந்தமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ (SpaceX) அமெரிக்க பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் அறிமுகமான நிலையில் இவருடைய சொத்து மதிப்பு 1.2 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, உலகின் முதல் ‘டிரில்லியன்’ (World’s First Trillionaire) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தஸ்தை எலான் மஸ்க் பெற்றுள்ளார். வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அவரது நிகர சொத்து மதிப்பு கற்பனைக்கு எட்டாத புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.

SpaceX IPO Elon Musk Elon Musk trillionaire SpaceX IPO 2 trillion Musk net worth 2026 Elon Musk house Boca Chica SpaceX Starbase Texas Musk 42 ownership Elon Musk wealth SpaceX Nasdaq listing Musk small house Elon Musk family home Austin 2 2026 42

எலான் மஸ்க்-ன் வீடு

Elon Musk தற்போது டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் தான் முழு நேரமாக வசித்து வருகிறார். அங்குள்ள போகா சிகா (Boca Chica) மற்றும் ஆஸ்டின் (Austin) ஆகிய நகரங்களில் மாறி மாறி வசித்து வருகிறார்.

இது இவரது விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமையகமான’SpaceX Starbase’ டெக்சாஸ் மாநிலத்தின் போகா சிகா பகுதியில் அமைந்துள்ளது. அங்கு எலான் மஸ்க் SpaceX நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட 1,580 சதுரடி கொண்ட ஒரு சிறிய வீட்டில் தான் பெரும்பாலான நேரம் வசித்து வருகிறார். இங்கிருந்து தான் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார்.

இதோடு எலான் மஸ்க்-கிற்கு 4 பெண்கள் மூலம் மொத்தம் 12 குழந்தைகளை பெற்றுள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்டின் நகரில் இருக்கும் 35 மில்லியன் டாலர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு எலான் மஸ்க் வாரம் ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ தான் செல்வார், மற்ற நேரங்களில் போகா சிகா வீட்டில் தான் வசித்து தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கவனித்து வருகிறார்.

வால் ஸ்ட்ரீட்டில் சம்பவம்

அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் (Nasdaq) ‘SPCX’ என்ற பெயருடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்திற்கு வந்தன. வர்த்தகத் தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களின் அதீத வரவேற்பு காரணமாக, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் 21 சதவீதத்திற்கும் மேலாக எகிறி, அதிகபட்சமாக 168.75 டாலர் வரை உயர்ந்து சாதனை படைத்தன.

வர்த்தகத்தின் இறுதியில் 160.95 டாலர் என்ற அளவில் நிலைபெற்ற இந்த பங்குகள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பை 2.1 டிரில்லியன் டாலராக உயர்த்தியுள்ளன.

எலான் மஸ்க்கின் சொத்து விவரம்

எலான் மஸ்க்கின் ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பு தற்போது 1.11 டிரில்லியன் டாலர் முதல் 1.2 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 115 லட்சம் கோடி ரூபாய்) என்ற பிரம்மாண்ட நிலையை எட்டியுள்ளது.

அவரது இந்த இமாலயச் சொத்து மதிப்பின் பெரும்பகுதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திலிருந்தே வருகிறது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சுமார் 42 சதவீதப் பங்குகளைத் தன்வசம் வைத்துள்ள எலான் மஸ்க்கின் அந்தப் பங்குகளின் மதிப்பு மட்டும் தற்போது 866 பில்லியன் டாலராகும்.

இது தவிர, டெஸ்லா (Tesla) நிறுவனத்தில் உள்ள அவரது 11 சதவீதப் பங்குகள் மற்றும் மீண்டும் நடைமுறைக்கு வந்த 2018 ஆம் ஆண்டின் பங்கு ஆப்ஷன்களின் மதிப்பு சுமார் 260 பில்லியன் டாலராக உள்ளது.

இதோடு அவருக்குச் சொந்தமான எக்ஸ் ஏஐ (xAI), நியூராலிங்க் (Neuralink), எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் தி போரிங் கம்பெனி (The Boring Company) ஆகியவற்றின் பங்குகளும் இந்த 1.2 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்ட வழிவகுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *