ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
வழக்கு எப்படித் தொடங்கியது?
2024-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 28 மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) பிரிவு 66(2)-ன் கீழ் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி விரிவான விசாரணைக்கு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 18 அரசு ஊழியர்கள் மற்றும் 10 தனியார் நபர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 28 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
துரைமுருகன்…
இந்த முதல் தகவலறிக்கையில் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் தலைமைப் பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி ஆகியோர் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
என்னென்ன குற்றச்சாட்டுகள்?
முதலாவதாக, மணல் குவாரிகளுக்கான ஒப்பந்தங்கள் விதிமுறைப்படி திறந்தவெளி டெண்டர் மூலம் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ‘லிமிடெட் டெண்டர்’ நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அரசு அனுமதித்த இடம், ஆழம் மற்றும் ஒப்பந்த எல்லைகளைத் தாண்டி அதிகப்படியான மணல் எடுக்கப்பட்டதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவதாக, மணல் எடுத்துச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு, அவை உண்மையானவைப் போல அரசுப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மணல் தனியார் டிப்போக்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக, இந்தச் சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பெருந்தொகை குறிப்பிட்ட தனியார் நபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, அவை முறையான வணிகப் பரிவர்த்தனைகளைப் போலக் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சட்டங்களுக்குக் கீழ் வழக்குப் பதிவு
> சதித்திட்டம், மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவண மோசடி மற்றும் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பாரதீய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
> இவற்றுடன், 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம்
1957-ஆம் ஆண்டின் சுரங்கம் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்.