தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அனைவருக்கும் ஓய்வுக்காலத்தில் பெரியளவில் கைக்கொடுப்பது – பி.எஃப் பணம்.
சில நேரங்களில், பணியில் இருக்கும் போதே, அவசரக் காரணங்களுக்காக பி.எஃப் பணம் கிளைம் செய்யப்படும்.
இந்த இரண்டில் என்ன காரணமாக இருந்தாலும், பி.எஃப் பணத்தைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல.
விண்ணப்பங்கள்… சரிபார்ப்புகள்… கால தாமதங்கள்… அலைச்சல்களுக்குப் பிறகு தான், பி.எஃப் பணத்தை பெற முடியும். ஆனால், இனி இதெல்லாம் இருக்காது.
இந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட உள்ளன என்று மத்திய பிஎஃப் ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
அவரது கூற்றின் படி, இனி ரூ.5 லட்சம் வரையிலான பி.எஃப் கிளைம்கள் “ஆட்டோ செட்டில்மென்ட்’ அடிப்படையில் செட்டில் செய்யப்படும்.
அதாவது, பி.எஃப் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் கிளைம் செய்தால், சரிபார்ப்பு… கால தாமதம் எல்லாம் இல்லாமல், வங்கிக் கணக்கில் தானாக செட்டில் செய்யப்பட்டு விடுமாம்.
அதுவும் கிளைம் செய்த மூன்று நாள்களுக்குள் பணம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நடைமுறையால் 7 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.