நம்முடைய மின்சாரப் பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம்.
ஆனால், எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.
இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே.