திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “துரந்தர் 2” படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் மாதவன் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தனது மகன் வேதாந்த் மாதவனை வளர்த்த விதம் குறித்து சில சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
அவரின் பேட்டியில், “குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களை விபரங்கள் தெரியாமல் வளர்ப்பது அல்ல, மாறாக அவர்களுக்கு உலகத்தின் எதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதே சிறந்தது.

வேதாந்திற்கு மிகச்சிறு வயதிலிருந்தே ஒரு முதிர்ந்த நபரைப் போலவே மதிப்பளித்து வளர்த்தேன். குறிப்பாக, பெரும்பாலான பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல் (Sexual touch), பாலியல் பாதுகாப்பு மற்றும் கருத்தடை (Contraception) போன்ற விஷயங்களைப் பற்றி, வேதாந்த் டீன்-ஏஜ் பருவத்தை எட்டுவதற்கு முன்பே, அதாவது அவரின் 4 வயதிலிருந்தே நான் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசி வருகிறேன். இது அவருக்கும் எனக்குமான நம்பிக்கையை அதிகரித்தது.