ரேஷன் கடையில் வெங்காயம் வாங்குகிறீர்களா? குறைகள் இருந்தால் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்! – Kumudam

Spread the love

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் தொடர்பான மக்களின் புகார்கள் மற்றும் குறைகளைத் தீர்க்க வாட்ஸ்அப் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளதாவது: அத்தியாவசியத் தேவையான வெங்காயத்தின் விலை அண்மைக் காலமாக வெளிச்சந்தைகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல் படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை சென்னையில் நேற்று முன்தினத்தில் இருந்தும்,, மற்ற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகளில் நேற்று முதலும் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த திட்டம் தொடர்பாகப் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது குறைகள் இருந்தால், அதனைத் தெரிவிப்பதற்காக 96005 61969 என்ற வாட்ஸ்அப் சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *