லக லக த.வெ.க. அமைச்சர்கள்…. எண்டர்டெய்ன்மென்ட்டுக்கு பஞ்சம் வைக்காத த.வெ.க. அரசு! – Kumudam

Spread the love

சொதப்பல் செங்ஸ்…

த.வெ.க.வின் சீனியர் அமைச்சரான செங்கோட்டை யனிடம், மகளிருக்கு மாதம் ரூ.2,500 திட்டம்’ மற்றும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற வாக்குறுதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியது திநிநிலையை பொறுத்து நாங்கள் படிப்படியாக நிறைவேற்றுவோம் திமுகவை கைகாட்டி  எஸ்கேப் ஆனார் இதனால் மகளிர் ஏகத்துக்கும் அப்செட் சீனியரே இப்படி டபாய்க்கும்போது ஜூனியர்களை சொல்லவா வேண்டும்! ஆளுக்கொரு நாள் லைம்லைட்டுக்கு வந்து அதிர்ச்சி அவந்த காமெடி செயல்களை செய்து மீம் கிரியேட்டர்களுக்கு செமத்தியாக தீனி போட்டு வருகின்றனர். 

சுற்றுச்சூழல் துறையா… சுற்றுலா துறையா?
ரீ டேக் ராஜீவ்!

சுற்றுக்குழல் துறை அமைச்சர் ராஜீவ், காவலன்’ காமெடி நடிகர் வடிவேலுவை போல தன் துறை பெயரையே துறை என செய்தியாளர்கள் சந்திப்பில் பலமுறை உளறிக் கொட்டினார் பின் சுதாரித்தவர். பிரஸ் மீட்டுக்கே டேக் கேட்டு ஷாக் கொடுத்தார். இதையடுத்து, நெட்டிசன்கள் அய்யோ பாவம் கண்ணதாசா, ஏடிதாசான்னு அவரே ஃபியூஸ் ஆகிட்டாரு என இணையத்தில் அவரை வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

அடடா விளக்கம் விக்னேஷ்!

தேர்தலுக்கு முன்.’பாட்டிலுக்கு 30 ரூபா பாடலை கம்போஸ் செய்து திமுக அரசுக்கு ஏதிராக பாடி வைரலாக்கினார் விஜய். ஆனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது நியாயம்தான் என்ற தொனியில் பேசி தற்போதைய மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கொடுத்த விளக்கம்தான் அடடே மொமன்ட் தவிர டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் தீர்வாகிவிடுமா? ஆகாது என்ம் கூறி வாக்களித்த மக்களை அதிரவைத்தார். 

நோ கமென்ட்ஸ் மினிஸ்டர்ஸ் ஸ்ரீநாத், குமார்!

அதேபோல் கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான  தீர்வு என்று ஓராண்டுக்கு முன்பாக அறிக்கையெல்லாம் விட்டார் விஜய். ஆனால் விஜய்யின் நண்பரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் அவ்விவகாரத்தில் அலட்ரா மோடுக்கே போய்விட்டார் கச்சத்தீவு தொடர்பாக அவரிடம் முன்வைக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் குமார். நோ கமெண்ட்ஸ் என முந்திக்கொண்டு பேச இருவருமே எஸ்கேப் இன்னும் ஒருபடி மேலே போய் தன் தொகுதி எதுவென்றே தெரியாமல் ஏரியா மாறி நன்றி தெரிவித்திருக்கிறார். பின், 23 புலிகேசி வடிவேலு மாதிரி வட பாண்டிகளா என நிர்வாகிகளை கடிந்துகொண்டதுதான் மிச்சம்.

ரீல்ஸ் கீர்த்தனா!
சோஷியல் மீடியா செலிபிரிட்டியாகவே வலம்வந்த கீர்த்தனா தொழில்துறை அமைச்சரான பின்னும் அந்த பாணியை கைவிடவில்லை. பெண் அமைச்சர் எனும் முறையில் கோவை சிறுமியின் பாலியல் கொலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது. அரசியல் போக வேண்டாம்’ என சிரித்தபடியே அவர் சொன்னது பார்ப்போரை கோபமடைய வைத்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவர் அளித்த விளக்கமும் சர்ச்சைக்குள்ளானது.அதைவிட மிக மோசமாக பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து புதிய தொழில்களை தொடங்கும் உலகலாவிய பிசினஸ் மேன்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்யச்சொல்லி இவர் அணுகிய விதம்தான் அல்டிமேட். பார்மல் கோட்’ ஷட்டில் கேமரா முன் வந்தவர் ஆங்கில மொழி நடையில் ஸ்டைலிஷயாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு அசத்தியதை தமிழகமே வியப்பாகத்தான் பார்த்தது. இப்போது ஊடகங்கள் பார்த்தாலே மறைந்துகொள்கிறார்!

நீ நல்லா சாப்பிட்டிருக்க… விஜய் தமிழன் பார்த்தியன்

விஜய்யுடன் மூன்று திரைப்படங்களில் நடித்து இன்று போக்குவரத்துறை அமைச்சராகியிருக்கும் விஜய் தமிழல் பார்த்திபனிடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் நீண்ட நேரமாக பேருந்து இல்லையென முறையிட தம்பி நீ நல்லா சப்பிட்டிருக்க நான் சாப்பிடவே இல்ல என மீண்டும் மீண்டும் கடுப்பாக சொன்னது பயணிகளை எரிச்சலடைய வைத்தது.

பிரசாத ஸ்டால் ஆய்வு ரமேஷ்

அதே வரிசையில் திருச்சி திருவாணைக்காவல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில் பிரசாத கடைக்குச் சென்று. ‘இந்த முறுக்கு 15ம் தேதிதான் தயாரித்தார்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது”எனக் மண்ட கேள்வி கேட்டார் விழிபிதுங்கிவிட்டார்கள் ஊழியர்களிடம் அதைவிட அடுத்த அதிரடியாக தவெக நிர்வாகிகள் அனைத்து கேள்விகளுக்கும் ஆய்வுக்குச் சென்று அவரது பாணியிலேயே ரீல் போட உத்தரவு பிறப்பித்ததும் பக்தர்களை திகைப்படைய வைத்தது.

இந்த அவமானத்தையெல்லாம் சரிக்கட்ட நினைத்தவருக்கு திருச்செந்தூர் கோயில் ஆய்வு நல்ல மைலேஜை கொடுத்துள்ளது. கன்னிடமே ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தவர், அர்ச்சகர் தன் சமூகம் என்பதால் தற்காலிகமாக பூஜை செய்யக்கூடாதென்று மன்னித்து விட்டுவிட்டார் என சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

ராஜ்குமார், ஆனந்த். விஜய் கல… கல…

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார். கடலூர் தென்னம்பாக்கம் அய்யனார் கோயிலில் விஜய்க்கும் தனக்கும் சிலை வைத்து வழிபாடு செய்திருக்கிறார். தமிழக சட்டம் ஒழுங்கு பற்றிய கேள்விக்கு துளசியா. நல்லா இருக்கியாமா என அமைச்சர் புலரி ஆனந்த் அலட்சியமாக நடந்து சென்றதும் வாயில் நல்லா வந்துடும்! நான் என்ன!’ என கேட்டு நிறுக்கியது போன்ற விஜய்யின் பேச்சுக்களும் சர்ச்சையாகி இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் தடாலடி

திருவெறும்பூர் தவெக எம்.எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த ஐடியாதான் பலே! வடிவேலு திரைப்படம் ஒன்றில் ‘தமிழகத்துக்கு நிதி கிடைக்க டெல்லி பக்கத்து தமிழகத்தை வைக்கணும்’ என சொல்வதுபோல, திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக பேசிய விஜி. இப்போது நான் என்ன தீர்வு சொல்ல, வரேன்னா … இந்த குப்பைகளை குவாரி பள்ளத்துல எடுத்துப்போய் கொட்டிட்டோம்னா. செலவும் குறையும். குவாரியும் மூடப்படும். குப்பையும் தேங்காது’ என் பகீர் கிளப்பினார்.

திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூர் குவாரி ஆய்வுக்குச் சென்ற போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் நக்கல் வேணாம் தம்பி. ஒழுங்கா நிக்கமாட்டியா? என தொழிலாளி ஒருவரிடம் மாஸ் காட்டி மக்கள் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார். இப்படியாக சர்ச்சைக்குரிய வகையில் புதிய மக்கள் பிரதிநிதிகள் செய்கைகள் அமைய, இதெல்லாம் பேமஸ் ஆகும் ட்ரிக்ஸ். அதனாலதான் ஒரேநாளில் எல்லா அமைச்சர்களும் ஆய்வுக்குச் சென்று சிக்குவதில்லை. ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்றும் விமர்சனம் எழுகிறது.
மொத்த பேருமே ரீல்ஸில் மூழ்கியிருந்தால் என்னத்த சொல்ல……

எழுதியவர்- அ.கண்ணதாசன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *