இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை தவெக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும்.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.