லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு; தாலுகா அலுவலகங்களில் சிக்கிய ரூ. 82 லட்சம் லஞ்ச பணம்? விவரம் என்ன? | DVAC Surprise Raids at Taluk Offices: ₹82 Lakh in Unaccounted Cash and Suspicious GPay Transactions

Spread the love

அதேபோல், சேலம் (ரூ.8,51,498), கோயம்புத்தூர் (ரூ.7,50,000), சென்னை – சோழிங்கநல்லூர் (ரூ.6,36,000), செங்கல்பட்டு – வண்டலூர் (ரூ.2,00,000), தென்காசி (ரூ.1,68,200), மதுரை – திருமங்கலம் (ரூ.1,25,000), மயிலாடுதுறை – சீர்காழி (ரூ.1,16,500) உள்ளிட்ட பல தாலுகா அலுவலகங்களிலும் சந்தேகத்துக்குரிய ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 35 தாலுகா அலுவலகங்களில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *