லாக்கப் மரணம்: ‘தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்’ – கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன் | Custodial death: ‘Blood clot in the head, injury to the neck’ – Sabari Varman killed in a brutal assault.

Spread the love

நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது.

மேலும், சிறப்பு மருத்துவக் குழு மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரேதப் பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், சபரி வர்மனின் உடலை உறவினர்கள் பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்ப உடற்கூறு ஆய்வு அறிக்கையில் மொத்தம் 19 காயங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் வலது முழங்கை, முன் கை மற்றும் தோள்ப் பகுதியில் பல சிராய்ப்புக் காயங்கள் உள்ளன. வலது கையின் நடுப்பகுதியில் பெரிய ரத்தக்கட்டு உள்ளது. வலது கையின் இரண்டாவது மெட்டாகார்பல் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது. கையின் உள்ளங்கை திசுக்களில் ரத்தக்கசிவு பதிவாகியுள்ளது.

வலது முன்கை மற்றும் வலது காலில் கட்டுப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் சிவப்பு தடயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடது முழங்கை, இடது கை, இடது கால் மற்றும் மார்புப் பகுதியில் சிராய்ப்பு மற்றும் ரத்தக்கட்டு காயங்கள் பதிவாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள்

கைதுசெய்யப்பட்டவர்கள்

அனைத்து காயங்களும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தலைப்பகுதியின் நடுவில் சுமார் 4 × 2 செ.மீ. அளவிலான ரத்தக்கட்டு, கழுத்தின் பின்புறத்தில் 3 × 1 செ.மீ. அளவிலான காயம் கண்டறியப்பட்டுள்ளன.

சில வெளிக்காயங்களுக்கு அடியில் உள்ள தோலடி திசுக்களிலும் ரத்தக்கட்டு இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காயங்களின் தன்மை குறித்து தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *