லாலா கடை பர்பி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு… ஆக்‌ஷன் எடுத்த அதிகாரிகள்..! – Kumudam

Spread the love

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர், எடப்பாடி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் லாலா ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட்ட சில மணி நேரங்களில் வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவானந்தத்தின் உறவினர்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

பிரபல இனிப்புக் கடையில் வாங்கிய பர்பியை சாப்பிட்டதாக கூறப்படும் நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதும், அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்ததும் எடப்பாடி பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *