லேசர் பொம்மைகள், லேசர் லைட் சூழலில் வேலை:பார்வையை பாதிக்கும் என்பது உண்மையா? | Working with laser toys or in environments with laser lights: Is it true that it can affect eyesight?

Spread the love

லேசர் கதிர்வீச்சு கண்ணின் மையப்பகுதியான ஃபோவியாவை (Fovea) பாதிக்கும்போது பல பிரச்னைகள் ஏற்படலாம். அதாவது, ஃபோவியாவில் தீக்காயங்கள் (Foveal burns), கண்ணுக்குள் ரத்தக்கசிவு, கண்ணின் மையப்பகுதியான மேகுலாவில் ஓட்டை விழுதல் (Macular hole), மேகுலாவில் தழும்பு ஏற்படுதல் (Macular scar) போன்ற பிரச்னைகள் பாதிக்கலாம்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ணுக்கு முன்னால் திடீரென ஒளி மின்னுவது போன்ற உணர்வை (Dazzling effect)  எதிர்கொள்வார்கள். சிலருக்கு இந்தப் பாதிப்பு தற்காலிகமாக இருந்துவிட்டு, சரியாகிவிடும், ஆனால், சிலருக்கு இதனால் கண்களில் நிரந்தர சேதம் ஏற்படலாம். 

விழித்திரை (Retina) பாதிக்கப்படலாம். அதன் விளைவாக கண்களில் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு (Floaters) தெரிவது அல்லது மையப்பார்வை முழுமையாக மறைவது போன்ற சிக்கல்களைச் சந்திப்பார்கள்.

இந்த அறிகுறிகளை உணர்ந்தால், பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனேயே கண் மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் முதல்கட்டமாக அடிப்படை சோதனைகளைச் செய்வார். தவிர, 
பார்வையின் அளவைக் கண்டறிய “விஷுவல் ஃபீல்ட்ஸ் டெஸ்ட்’ (Visual Fields Test),  ரத்த நாளங்களின் நிலையை அறிய, ‘ஃபண்டஸ் ஃப்ளோரசீன் ஆஞ்சியோகிராபி’  (Fundus Fluorescein Angiography),  பாதிப்பின் தீவிரத்தைத் துல்லியமாகக் கணிப்பற்கு ‘ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’  (Optical Coherence Tomography) போன்றவற்றையும் பரிந்துரைப்பார். 

வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால்  அவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால் அவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
freepik

பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில்,  லூப்ரிகன்ட் சொட்டு மருந்துகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார். அதுவே,  ரத்தக்கசிவு இருந்தால், விட்ரெக்டமி (Vitrectomy) அறுவை சிகிச்சை மூலம் ரத்தம் அகற்றப்படும். மேகுலாவில் ஓட்டை இருந்தால், அந்தத் துளையை அடைக்க  விட்ரெக்டமி அறுவை சிகிச்சையுடன் காஸ் இன்ஜெக்ஷனும் (Gas injection) கொடுக்கப்படும். 

தற்போது குழந்தைகள்  லேசர் பாயின்டர்கள் (Laser pointers) வைத்து விளையாடுவது அதிகரித்து வருகிறது. அவை கண்களை நிச்சயம் பாதிக்கும். அதேபோல் வெல்டிங் வேலை செய்பவர்களும் அதிக பிரகாசமான ஒளிக்கு ஆளாவதால்  அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், தேவையற்ற பிரகாசமான ஒளிக்கதிர்களைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *