‘வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தமந்தர் பாணியில் திரள்!’ – சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்? |”Chennai Cockroach Protest Escalates: Students Boycott Classes, Stage Jantar Mantar-Style Sit-in”

Spread the love

மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களத்துக்கு வர தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை லயோலா, மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

SFI போராட்டம்

SFI போராட்டம்

SFI மற்றும் DYFI மாணவ அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை மட்டுமே காவல்துறையினர் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். ஆனால், மாணவ அமைப்பினர் இந்தப் போராட்டத்தை “சென்னை ஜந்தர் மந்தர்’ எனப் பெயரிட்டு தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தினர் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்டுருந்தனர். உழைப்போர் உரிமை இயக்கத்தினர் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *