பெரிய திரைப்படங்களின் வசூல் குறித்து அந்த நேர்காணலில் பேசியவர், “சினிமா வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டாலும், 10 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறும்.
எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி விகிதம் என்பது 10 முதல் 20 சதவிகிதம் மட்டும்தான். சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து இயக்குநர்களின் எண்ணமும் நேர்மையானதுதான்.

ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தோடுதான் அனைவரும் உழைக்கிறார்கள். சில நேரங்களில் அது வெற்றி பெறுகிறது, சில நேரங்களில் கைக்கொடுப்பதில்லை.
வசூலை மட்டுமே ஒரு படத்தின் தரத்திற்கான அளவுகோலாக நாம் பார்க்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.” என்று பேசியிருக்கிறார்.
சிறிய பட்ஜெட் படங்களை மீண்டும் இயக்குவாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தந்தவர், “அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பெரிய பட்ஜெட் படங்கள் அமைகிறதா என்று பார்ப்பேன்.
அப்படி அமையாவிட்டால் சிறிய பட்ஜெட் படம் பண்ணுவேன், அவ்வளவுதான். நல்ல கதை அமைந்தால் மீண்டும் ஒரு ரீமேக் படம் செய்வேன்.” என்கிறார்.