கராத்தே பாபு: "ரவி மோகன் சாருடன் பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று"- நெகிழ்ந்த இயக்குநர்

Spread the love

கணேஷ் கே பாபு இயக்​கத்​தில், ரவி மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கராத்தே பாபு’. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​திருக்கிறார்.

அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு முன்​னாள் காவல்துறை தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கராத்தே பாபு
கராத்தே பாபு

இந்நிலையில் ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றியது குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “சில கனவுகள் நம்மை வந்தடைய பல வருடங்கள் ஆகும். அப்படியான கனவு ஒன்றை நான் நனவாக்கியுள்ளேன்.

ரவி மோகன் சாருடன் இணைந்து பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அவருடன் திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தைப் பகிர்வது ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியது. இன்று ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் தனது பயணத்தை அவர் நிறைவு செய்யும் வேளையில், என்னிடம் நன்றியைத் தவிர சொல்ல வேறு ஏதுமில்லை.

அனைவரும் கொண்டாடும் நடிகர் என்பதைத் தாண்டி, அவரை ஒரு மனிதனாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது ஒழுக்கம், அடக்கம், பெருந்தன்மை மற்றும் ஒவ்வொரு காட்சியையும் அவர் அணுகும் முறை ஆகியவை எந்தத் திரைப்படக் கல்லூரியும் கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தன.

கராத்தே பாபு
கராத்தே பாபு

ஒவ்வொரு உரையாடலும், ஒவ்வொரு காட்சியும், படப்பிடிப்புத் தளத்தில் கழித்த ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு நடிகர் மீதான எனது ஈர்ப்பு அதைவிட மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக மாறியது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர் கிடைத்தார். ‘கராத்தே பாபு’ மீது நம்பிக்கை வைத்து, இப்படத்திற்காக உங்கள் இதயத்தை உருகி, உழைத்து, இந்தப் பயணத்தை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றியமைக்கு நன்றி ரவி மோகன் சார். இந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *