வடகொரியாவுடன் கைகோர்த்த இந்தியா! கிம் ஜாங் உன்னை சந்தித்த இந்தியாவின் புதிய தூதர்.. யார் இவர்? | Kim Jong Un receives credentials from Indian ambassador to North Korea

Spread the love

International

oi-Nantha Kumar R

பியாங்யாங்: மர்மதேசமாக விளங்கும் வடகொரியாவுடன் இந்தியா மீண்டும் கைகோர்த்துள்ளது. வடகொரியாவிற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் ஜெயின் முறைப்படி பதவியேற்றுள்ளார். அதோடு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் சந்தித்த நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

north korea kim jong un india

திடீரென ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பானை அலறவிட்டு வருகிறார் கிம் ஜாங் உன். இவர் தற்போது நட்பாக இருக்கும் இரண்டு நாடுகள் என்றால் ஒன்று ரஷ்யா. மற்றொன்று சீனா ஆகியவை தான்.

இந்நிலையில் தான் வடகொரியாவுடன் மீண்டும் தூதரக உறவை பலப்படுத்தி உள்ளது இந்தியா. வடகொரியாவிற்கான இந்திய தூதராக சஞ்சீவ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டார். இவர் முறைப்படி தற்போது வடகொரியாவிற்கான இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கான நியமண ஆணையை சஞ்சீவ் ஜெயின், கிம் ஜாங் உன்னை சந்தித்து வழங்கி உள்ளார்.

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்க் நகரில் ‘கொரிய தொழிலாளர் கட்சி’யின் (கிம் ஜாங் உன் கட்சி) மத்திய குழு தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் வடகொரியாவின் தூதர்களாக நியமனம் செய்யப்பட்ட 9 தூதர்களை கிம்ஜாங் உன் சந்தி்ததார். அதன்பிறகு அவர் ஒவ்வொருடன் தனித்தனியாக போட்டோ எடுத்து கொண்டார். இந்த சமயத்தில் தான் வடகொரியா தூதராக இந்தியா சார்பில் நியமனம் செய்யப்பட்டதற்கான கடிதத்தை சஞ்சீவ் ஜெயின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் பேசியது தொடர்பாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான கேிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”விழாவில் பங்கேற்ற தூதர்களுக்கும், அந்தந்த நாட்டு மக்களுக்கும் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்தார். சர்வதேச சட்டங்கள், வடகொரிய விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தூதர்களின் சிறப்புரிமை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு மீண்டும் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சி, சுதந்திரம் அமைதி மற்றும் நட்புறவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்த தயாராக இருக்கிறோம்”என பேசினார்.

இந்திய தூதரின் பின்னணி என்ன?

தற்போதைய தூதர் சஞ்சீவ் ஜெயினுக்கு முன்பாக வடகொரியாவின் இந்திய தூதரக அலியாவாடி லாங்க்குமர் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இவர் 2025 ஜூன் மாதம் 16ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பிறகு சஞ்சீவ் ஜெயின் அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சீவ் ஜெயின் கடந்த 2008ம் ஆண்டை சேர்ந்த ஐஎஃப்எஸ்(Indian Foreign Service or IFS) அதிகாரி ஆவார். இவர் கடந்த ஜூலை மாதமே வடகொரியாவின் அதிபராக நியமனம் செயய்பபட்டார். இஇதற்கு முன்பு இவர் ரிபப்ளிக் ஆஃப்காபோவெர்டி நாட்டின் தூதராக பணியாற்றினார்.

இந்தியா – வடகொரியா உறவு எப்படி?

இந்தியா – வடகொரியா இடையே கடந்த 1962ம் ஆண்டு மார்ச் மாதம் தூதரக உறவுகள் தொடங்கியது. 1968 ம்ஆண்டில் இந்திய துணைத்தூதரகம் அங்கு அமைக்கப்ட்டது. அதன்பிறகு 1973 ம் ஆண்டில் முழுமையாக இருநாடுகள் இடையே தூதரக உறவுகள் தொடங்கியது. இருநாடுகள் இடையே தூதரக உறவு இருந்தாலும் கூட அணுஆயுயுதம், ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வடகொரியாவின் செயல்பாட்டை நம் நாடு விரும்புவது இல்லை. இத்தகையை செயல்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது பதற்றத்தை அதிகரிக்கிறது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தென்கொரியா, ஜப்பான் உள்பட பிற அண்டை நாடுகளுடன் இருக்கும் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்றும் இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *