வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி | North Korean Women’s Football Team Makes History, Celebration With Kim Jong Un

Spread the love

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர்.

“ஏஎப்சி மகளிர் சாம்பியன்ஸ் லீக்’ இறுதிப்போட்டியில், ஜப்பானின் டோக்கியோ வெர்டி பெலெஸா அணியை 1-0 என வீழ்த்தி வடகொரியாவின் ‘நேகோஹியாங் மகளிர் எஃப்சி’ சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இக்கோப்பையைக் கைப்பற்றிய முதல் வடகொரிய கிளப் என்ற பெருமையைப் பெற்ற இந்த வீராங்கனைகளை கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து வாழ்த்தியபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பியொங்யாங்கில் நடைபெற்ற ஒரு சிறப்புப் பாராட்டு நிகழ்ச்சியில், சாம்பியன்ஸ் லீக் வென்ற நேகோஹியாங் அணியினருடன், சமீபத்தில் 2026 ஏஎப்சி யு-17 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற வடகொரியாவின் இளம் தேசிய மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர். அவர்களை முகம் நிறையப் புன்னகையுடன் பாராட்டிய கிம் ஜாங் உன், கைகளைக் குலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *