வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம் | Wayanad Landslide: Cm convenes emergency meeting; rescue operations

Spread the love

கேரள மாநிலம் வயநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 265 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்தத் தொடர் மழை காரணமாக மேப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒருசில இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு வந்த நிலையில், அனக்கம்பொயில் – மேப்பாடி இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நுழைவு வாயில் பகுதியில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களும் மண்சரிவில் சிக்கியுள்ளன.

வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு

சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இதனால் மண்ணுக்கடியில் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மண்சரிவில் சிக்கிய 5 நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்துள்ள நபர்களைத் தேடி கண்டறிந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வயநாடு மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரள மாநில அமைச்சர் டி. சித்திக் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் நிலைமையை தொலைபேசி மூலம் கேட்டறிந்து, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மேலும், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்களை உடனடியாக வயநாட்டிற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *