Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து நட்சத்திர வீரர் சிவம் துபே ரிலீஸ் கேட்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிவம் துபே எதிர்பார்த்த பேட்டிங் வரிசையில் வாய்ப்பு அளிக்காததால், அவர் அந்த முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பவுலிங்கிலும் சிவம் துபேவை பயன்படுத்தாமல் சிஎஸ்கே தவிர்ப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் டிரேட் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக சிஎஸ்கே அணி தரப்பில் சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் சிவம் துபேவை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுக்க கூடாது என்று பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர். ஏனென்றால் சிவம் துபே பேட்டிங்கில் பெரிதாக அவுட் ஃபார்முக்கு சென்றதே இல்லை. கடந்த 5 ஆண்டுகளாகவே சிவம் துபேவின் ஆட்டம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இன்னும் 3 ஆண்டுகள் சிவம் துபே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை போன்ற மைதானங்களில் சிவம் துபேவுக்கு பந்து சிக்கினால் ஒரு காட்டு காட்டிவிடுவார் என்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை டிரேட் செய்யும் முடிவுக்கு பின்னணியில் அவரே காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே சிவம் துபே எதிர்பார்த்த பேட்டிங் வரிசையில் பேட்டிங் ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஃபினிஷர் ரோல் அல்லது ஸ்பின் ஹிட்டராக மட்டுமே சிஎஸ்கே அணி பயன்படுத்தி வருவதாக சிவம் துபே கருதுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் பவுலிங்கில் தொடர்ச்சியாக அசத்தி வரும் சிவம் துபே, சிஎஸ்கே அணிக்காக பெரியளவில் பவுலிங் செய்ததே கிடையாது. பல நேரங்களில் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே சிவம் துபே பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
இதனால் மனதளவில் சிவம் துபே வருத்தத்தில் இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து சிவம் துபே ரிலீஸ் கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமின் போது சிவம் துபேவிடம் பேசி பார்க்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் இறுதி முடிவு இன்னும் 2 வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.