முக்கியமாக, வருமான வரித் துறையே உங்களுடைய வருமானத்தைக் கணக்கில் கொள்ளும் போது, ஃபார்ம் 168-ல் (முன்னால் 26AS, AIS) இருக்கும் அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்ளும். அதனால், மிக மிகக் கவனம் தேவை.
மேலும், உங்களுக்கு வருமான வரி விலக்கு இருந்தாலும், இந்தச் சூழலில், வருமான வரி விலக்கு கிடைக்காது.
அதற்குப் பதிலாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததற்கு வரி, அதற்கான வட்டி, அபராதம் என அனைத்தும் உங்கள் தலையில் விழுந்துவிடும்.

முன்பு, மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாலும், இப்போது செய்யலாம். ஆனால், இப்போது அப்படி இல்லை.
அந்தந்த ஆண்டிற்கு அப்போதே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட வேண்டும்.
ஒருவேளை, வரி ஏதேனும் நீங்கள் கட்ட வேண்டியதாக இருந்தால் மட்டுமே, ஃபைல் செய்ய முடியும். ஆனால், அதற்கும் அபராதம் உண்டு. ஆனால், ரீஃபண்ட் இருந்தாலும், அது கிடைக்காது”.